தென்காசி அருகே சிவகிரி காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய விசாரணையின்போது ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற முதியவர் அந்தோணி ராஜ் (65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவரை, போலீசார் மரியாதை குறைவாக நடத்தியதோடு கன்னத்தில் அறைந்ததாகவும், இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.