ஆட்சியர் வளாகத்தில் முதியவர் தற்கொலை முயற்சி

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தர்மராஜ் என்பவர் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது 2 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக தர்மராஜ் புகார் அளித்துள்ளார். ஆனால், அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி வந்துள்ளார். இதில் விரக்தியடைந்த தர்மராஜ், ஆட்சியர் அலுவலகம் அருகேவுள்ள மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அங்கிருந்த போலீசார், அவரை பத்திரமாக மீட்டனர்.

நன்றி: KumudamNews24x7

தொடர்புடைய செய்தி