டாஸ்மாக் கடையில் காலி பாட்டில் பணத்திற்காக முதியவர் தாக்குதல்

சேலம் பூலாவரி டாஸ்மாக் கடையில், காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்திற்கான ₹10 ஸ்டிக்கர் கட்டணம் குறித்து ஊழியர் பற்குணனுக்கும், ஒரு முதியவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முதியவர், தனது செருப்பைக் கழற்றி ஊழியரைத் தாக்கியுள்ளார். இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி