எல் நினோ தாக்கம்: இந்தியாவில் குளிர்காலப் பயிர் விளைச்சல் குறையும் அபாயம்

எல் நினோ தாக்கத்தால் மண்ணின் ஈரப்பதம் கணிசமாக குறைந்துள்ளதால், இந்தியாவில் வரவிருக்கும் குளிர்கால பயிர் விளைச்சல் பெருமளவில் குறையும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். போதிய பருவமழை பொழியாததாலும் நீர் நிலைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும், விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு நாட்டின் உணவு விநியோக சங்கிலியில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்கத்தால் உணவு பொருட்களின் தட்டுப்பாடு உயர்ந்து, நாட்டின் பொருளாதாரத்திலும் பாதிப்புகள் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕