2026-ம் ஆண்டில் உருவாக வாய்ப்புள்ள 'எல் நினோ' தாக்கத்தை கண்காணிக்க 7 பேர் கொண்ட நிபுணர் ஆலோசனை குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை குறைவு மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படக்கூடிய கனமழை, வெள்ளம் போன்ற தீவிர சவால்களை எதிர்கொள்ள இக்குழு தமிழ்நாடு பேரிடர் இடர் குறைப்பு முகமைக்கு ஆலோசனைகளை வழங்கும். மழை, வறட்சியை கண்காணித்து, முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துவதே இக்குழுவின் பிரதான பணியாகும்.
நன்றி:PT