பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈஃபெல் கோபுரம் (Eiffel Tower) கோடைகாலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது சுமார் 15 செ.மீ வரை உயரம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் வெப்ப விரிவாக்கம் (Thermal Expansion) எனப்படுகிறது. வெப்பம் அதிகரிக்கும் போது இரும்பு விரிவடைவதால், கோபுரத்தின் நீளம் சற்று பெரிதாவதாக தெரிகிறது. குளிர்காலத்தில் மீண்டும் அது சுருங்கிவிடும் எனவும் இது இயற்கை அறிவியலின் அற்புதமான ஒரு உண்மை எனவும் கூறப்படுகிறது.