நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.6.30-லிருந்து ரூ.6.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தைத் தேவை அதிகரிப்பு காரணமாக முட்டை விற்பனை தற்போது விறுவிறுப்படைந்துள்ளது. இதன் எதிரொலியாகக் கடந்த 5 நாட்களில் மட்டுமே முட்டையின் கொள்முதல் விலை 70 காசுகள் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை விலை ரூ.8 வரை அதிகரித்துள்ளது.
நன்றி: நியூஸ் 18