நாமக்கல் மண்டலத்தில் தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது உற்பத்தி குறைந்துள்ளதாலும், தேவை அதிகரித்துள்ளதாலும் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று (நவ., 18) நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்தி, 605 காசுகளாக நிர்ணயித்துள்ளனர். இதனால், முட்டை கொள்முதல் விலை ரூ.6.05 ஆக உயர்ந்துள்ளது. முட்டை கடந்த இரண்டு வாரங்களில் 65 காசுகள் விலை அதிகரித்துள்ளது.