நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பண்ணையாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு, 8 நாட்களுக்கு பிறகு இன்று விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 5.90-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.7-க்கு விற்கப்படும் நிலையில், இனி ரூ.7.50 வரை உயர வாய்ப்புள்ளதால் மக்களின் முட்டை நுகர்வு குறையக்கூடும்.