நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பண்ணையாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு, பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாததால், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை அதே ரூ. 5.70-ஆகத் தொடர குழுவினர் முடிவெடுத்து அறிவித்தனர். கடந்த 8 நாட்களாக இதே விலையில் நீடிக்கிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.7-க்கு விற்கப்படுவதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.