முட்டை விலை ரூ.5.70 ஆக சரிந்தது.. மக்களுக்கு நிம்மதி

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த ஒரு மாதத்தில் முதன்முறையாக 6 ரூபாய்க்கு கீழ் சென்றுள்ளது. இன்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை 30 காசுகள் குறைத்து ரூ.5.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் முட்டை விலை ரூ.1.10 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.8-க்கு விற்பனையான முட்டை விலை குறையும் என்பதால் சாமானிய மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕