நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இதுவரை 460 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை, இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடிப்பதாலும், வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டதாலும் விலை சரிந்துள்ளது. இந்த நிலையில், இன்று (மார்ச் 03) மேலும் 30 காசுகள் குறைக்கப்பட்டு 430 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ஒரு முட்டை ரூ.5-க்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.