செங்கோட்டையனை திமுகவில் இணைக்க நடக்கும் முயற்சி

MLA பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் அமைச்சர் சேகர்பாபு செங்கோட்டையனுடன் சந்திப்பு நடத்தியுள்ளார். செங்கோட்டையனை தி.மு.க-வில் இணைக்கும் முயற்சியாக சேகர்பாபு சந்திப்பு என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக திமுக அமைச்சர் முத்துசாமி செங்கோட்டையனை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி