கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

மூத்த கல்வியாளர் வசந்தி தேவியின் மறைவு கல்வித்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வியாளர் வசந்தி தேவி கல்வியில் மதவாதம், வியாபாரம், மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வந்தார். கல்வித் தளத்தில் மட்டுமல்லாது பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் போராடிய செயற்பாட்டாளர் வசந்தி தேவி" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி