தனது பரபரப்பான வேலைச்சூழலிலும், அரசுப் போட்டித் தேர்வுக்கு பெண் நடத்துநர் ஒருவர் தயாராகி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வேலை இடைவேளையின் போது பிஎஸ்சி தேர்வு புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருக்கும் வீடியோவை பயணி ஒருவர் பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். நடத்துநரின் இந்த முயற்சிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அதே நேரத்தில் நடத்துநர் பணியையும் கவனம் சிதறாமல் மேற்கொள்ள நெட்டிசன்கள் அட்வைஸ் கூறியுள்ளனர்.