எடப்பாடி பழனிசாமி, வேலுமணி திடீர் டெல்லி பயணம்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச்.25) காலை 11.30 மணியளவில் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு முக்கிய தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி., வேலுமணியும் இன்று மாலை டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி