அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது அரசு இல்லத்தைக் காலி செய்துள்ளார். இதற்கு முன்பு அவர் அமைச்சர், முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இந்த அரசு பங்களாவில் வசித்து வந்தார். தற்போது, தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் இழந்துள்ளார். இந்நிலையில், அந்த இல்லத்தை காலி செய்துவிட்டு அதிமுக தலைமையகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் உள்ள புதிய வீட்டிற்கு அவர் குடிபுகுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி: நியூஸ் தமிழ்