முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா, எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கொடுத்துள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்த கேள்விக்கு இன்று (மே 15) ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா தண்டித்து வருகிறது. மக்களை நேசிக்காதவர்களுக்கு சரிவுதான் ஏற்படும் என தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பின் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ளதால் அதிமுக பிளவுபட்டுள்ளது.