ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவரும் எபோலா வைரஸ் நோய்த்தொற்று பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, தூத்துக்குடியில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எபோலா பாதிப்பு சந்தேகத்தின் பேரில் வருபவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளைத் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.