ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கம்பு மற்றும் கேழ்வரகு (ராகி) உடலுக்கு பல நன்மைகளை தந்தாலும், அவற்றை இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இந்த தானியங்களில் நார்ச்சத்து மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால், இரவில் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்து கொள்ளும். இதனால் தூக்கமின்மை, வயிறு உப்புசம் மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இவற்றை காலை அல்லது மதிய உணவாக உட்கொள்வதே உடலுக்கு சிறந்தது.