சிக்கிம், அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. சிக்கிமின் காங்டாக் பகுதியில் இன்று (பிப்., 20) அதிகாலை 2.37 மணியளவில் ரிக்டர் அளவில் 2.5 ஆகவும், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேற்கு கமெங் பகுதியில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் ரிக்டர் அளவில் 2.6 ஆகவும் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி