அருணாச்சல பிரதேசத்தில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்தின் திராப் பகுதியில் இன்று (ஜூலை 28) மாலை 6.36 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 3.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 27.06 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.42 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ஏற்பட்டதாக முதலில் கண்டறியப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி