ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே-லடாக் பகுதியில் இன்று (ஜன.19) ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதங்களோ அல்லது பெரிய அளவிலான சொத்து சேதங்களோ ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.