விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 10 கிலோமீட்டர் ஆழத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்குள் இருந்த மக்கள் அனைவரும் வெளியே அலறியடித்து ஓடினர். சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிர்வை உணர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த நில அதிர்வு குறித்து தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.