குஜராத்தின் கட்ச் பகுதியில் நிலநடுக்கம்

குஜராத்தின் கட்ச் பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் இன்று (டிச., 26) அதிகாலை 4.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தின் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி