அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு கமெங் பகுதியில் இன்று (அக்.11) காலை 8.31 மணியளவில் ரிக்டர் அளவில் 3.5 ஆக லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையம் இதனைத் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.52 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 92.85 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி