திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி, தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய சான்றுகள் இல்லாத காரணத்தால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலுவின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இறுதி தீர்ப்பை உறுதி செய்துள்ளது.