பராமரிப்பு பணிகள் காரணமாக இ-சேவை இணையதளம் முடக்கம்

தமிழகம் முழுவதும் இ-சேவை இணையதளம் கடந்த இரண்டு நாட்களாக முடங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் மாணவர்கள், சான்றிதழ்கள் மற்றும் அரசு சேவைகளுக்காக விண்ணப்பிக்க வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இணையதளம் செயல்படாததால் பல இ-சேவை மையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விரைவில் சேவை முழுமையாக மீண்டும் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி