PM கிசான் திட்டத்தின் கீழ் 24-வது தவணை நிதியுதவி ரூ.2000 பெற தகுதியுள்ள விவசாயிகள், தங்கள் e-KYC நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், நேரடி பயன் பரிமாற்ற முறையில் தொகை வங்கிக் கணக்கில் சரியாக வரவு வைக்கப்பட, ஆதார் மற்றும் NPCI இணைப்பு சரியாக இருக்கிறதா என்பதை விவசாயிகள் உறுதிசெய்து கொள்ள வேண்டும். pmkisan.gov.in என்ற இணையதளம் அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக பதிவுகளில் உள்ள பிழைகளை திருத்தி, தடையின்றி நிதியுதவியை பெறலாம்.