கரூரில் தவெக தலைவர் விஜய் மக்களை சந்திக்க சென்றார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் ஏற்றிச் சென்றபோது, அப்போது ஆம்புலன்ஸ்களை தாக்கிய 8 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 8 பேருக்கும் மதுரை அமர்வு நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியுள்ளது. 8 பேரும் 2 வாரங்கள் சேலம் டவுன் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.