திமுகவில் மூத்த அமைச்சரான துரை முருகனை துணை முதல்வராக்காதது ஏன் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். துரை முருகன் பல தியாகங்களை செய்துள்ளார். திமுகவிற்காக எவ்வளவோ உழைத்துள்ளார். ஏன் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி மட்டும் கொடுத்துள்ளனர். துரை முருகன் வன்னியர் சமுதாயத்தில் பிறந்ததால் அவருக்கு துணை முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது என அன்புமணி தெரிவித்தார்.