திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், மன்னிப்பு கேட்டு வெளியிட்ட அறிக்கையில், “பேச்சின் வேகத்தில் மாற்றுத்திறனாளிகளை பழைய பெயரை கொண்டு உச்சரித்தது கவனத்துக்கு வந்தபோது வருத்தமடைந்தேன். கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப்பெரிய தவறாகும். மாற்றுத்திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும், அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதியளிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: Kalaignarnews