"என்னால் தனியாகக் கட்சி நடத்த முடியாது, திமுகவுடனே இணைந்து விடுகிறேன் என்று கூறியவர்தான் துரை வைகோ" என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார். மேலும், பாஜகவின் எந்தவொரு கொள்கையுடனும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் உடன்பட்டதில்லை என்றும், தவெக கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள்தான் பாஜகவுடன் மறைமுக உறவில் இருப்பதாகவும் அவர் காரசாரமாகக் குற்றம்சாட்டியுள்ளார். திமுக மீதான துரை வைகோவின் தொடர் விமர்சனங்களுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
நன்றி: பாலிமர்