உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கடன் நெருக்கடி காரணமாக சம்பவ் என்ற இளைஞர் 43-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டடத்தில் இருந்து அவர் குதிக்க முயன்றபோது, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் அவரை காப்பாற்ற முயற்சித்தும் பலனின்றி அவர் கீழே குதித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், இளைஞரின் உயிரிழப்புக்கான பின்னணி மற்றும் கடன் பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.