கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் புகார் அளிக்க அலுவலகத்திற்கு வந்த இளம்பெண்ணிடம் DSP பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுகிரியை சேர்ந்த DSP ராமச்சந்திர பாப், தனது அலுவலகத்திற்கு நில வழக்கு தொடர்பாக புகார் அளிக்க வந்த அந்த பெண்ணை கழிவறைக்கு அழைத்துச்சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.