ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையின் நடுவே மதுபோதையில் ஒரு தம்பதியினர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் சாலையில் சென்ற வாகனங்களின் குறுக்கே படுத்து அட்டூழியம் செய்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மனைவியை கணவன் கடுமையாக தாக்கியதோடு, அப்பகுதியில் சென்றவர்கள் மீதும் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நன்றி: தந்தி டிவி