போதையில் தகராறு.. கணவரை சுத்தியலால் அடித்த மனைவி

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கருணாகரன், தினமும் குடித்துவிட்டு மனைவி குழந்தைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல சம்பவத்தன்றும் அவர் போதையில் மனைவி சரஸ்வதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சரஸ்வதி, வீட்டில் இருந்த சுத்தியலால் கருணாகரன் தலையில் ஓங்கி அடித்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த கருணாகரனை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி