ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடா அருகே இளைஞர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துராஜபுரத்தில் உள்ள ஆல்பா டீ கேன்டீனில், போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் கத்தியால் தாக்கிக் கொண்டனர். மேலும் அந்த இளைஞர்கள், சாலையில் செல்லும் மக்கள் மீது பீர் பாட்டில்களை வீசியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இளைஞர்களை கைது செய்யப்பட்டனர்.
நன்றி: TeluguScribe