திருப்பதி கோவில் கோபுரத்தின் மீது ஏறிய போதை இளைஞர்

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசுவாமி கோயிலில் பாதுகாப்பு குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. குடிபோதையில் இருந்த ஒருவர் ஊழியர்களின் கவனக் குறைவை பயன்படுத்தி சுவர் ஏறி கோயிலுக்குள் நுழைந்தார். விஜிலென்ஸ் கவனிக்கும் முன்பே கோபுரம் ஏறி கலசங்களை இழுக்க முயன்ற அவர், மது தராவிட்டால் கீழே இறங்கமாட்டேன் என வம்பு செய்தார். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி