சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட ராஜவேல் என்பவரைக் கட்டுப்படுத்த முயன்ற காவல் ஆய்வாளர் காதர் மீராவை அவர் அரிவாளால் வெட்டியதில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட அந்த நபரைப் பொதுமக்கள் துணிச்சலாக மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த காவல் ஆய்வாளர் காதர் மீரா உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.