போதையில் 15 நாட்களே ஆன பெண் குழந்தையை அடித்துக்கொன்ற தந்தை

உத்தரப் பிரதேசத்தில் போதைக்கு அடிமையான தந்தை, தனது 15 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை அடித்து கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அலிகார் மாவட்டத்தில் வசிக்கும் அந்த நபர், போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுத்த மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்து குழந்தையை கொன்றுவிட்டு சடலத்திற்கு அருகிலேயே உறங்கியதாக கூறப்படுகிறது. குழந்தையின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், தந்தையை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி