சென்னையில் போதைப்பொருட்கள் பறிமுதல்.. 5 பெண்கள் கைது

சென்னை சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 5 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போதைப்பொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, யாருக்கு விற்பனை செய்யப்படுகின்றன, இதன் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி

✕
✕