தர்மபுரி நகரப்பகுதி நான்கு வழி சாலை அருகில் அரசு மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று (ஜூன் 11) இரவு சூர்யா என்ற இளைஞர் ஒருவர் கழுத்தில் பாம்பு ஒன்றை சுத்தி கொண்டு மது வாங்க வந்தார். மது வாங்கிய அந்த இளைஞர் தானும் குடித்துவிட்டு, பாம்பின் வாயிலும் மதுவை ஊற்றி அங்கு இருந்த மக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். இதையடுத்து, போக்குவரத்துக்கு காவலர் ஒருவர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
நன்றி:பாலிமர் நியூஸ்