வறட்சி: விநாயகர் சிலைகளை கரைக்க முடியாமல் மக்கள் தவிப்பு

ஆந்திரப்பிரதேசத்தில் நிலவும் கடும் வறட்சியால், விநாயகர் சதுர்த்திக்கு பிறகு சிலைகளை கரைக்க மக்கள் சிரமப்படுகின்றனர். அனந்தப்பூர், சித்தூர், ராயலசீமா, கடப்பா மாவட்டங்களில் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. குறிப்பாக, ராயலசீமா மாவட்டத்தில் பாயும் சித்ராவதி ஆறு வற்றிப்போனதால், புத்துலூரு மற்றும் எல்லனூரில் மக்கள் சிலைகளை தரையில் விட்டுச் செல்கின்றனர். வறட்சியை கணித்து அரசு போதிய நீர் வழங்கத் தவறியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕