சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பூந்தமல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை தொடங்க திட்டமிட்டிருந்தது. இதற்கான சோதனை ஓட்டப் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் அதிகாரிகள் முன்னிலையில் இந்த சோதனை நடைபெற்றது. இந்நிலையில், 2.5 மாதங்கள் ஆகியும் சான்றிதழ் வழங்கப்படாததால், சேவையை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முறையிட்டுள்ளது.