ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் முதன்முறையாக ஓட்டுநர் இல்லா தானியங்கி சரக்கு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அங்குள்ள பெர்லின் நகரில் சரக்குகளை ஏற்றி செல்வதற்காக இந்த தானியங்கி வாகனத்தை பயன்படுத்த தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அரசு முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து துறையில் புதிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த முயற்சி, எதிர்கால போக்குவரத்து அமைப்பிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.