ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான 'திரிஷ்யம் 3' திரைப்படம், கடந்த 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், முதல் நாள் பாக்ஸ் ஆபிசில் ரூ.50.35 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டதுடன், தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. 'திரிஷ்யம் 2' 2021-ல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.