ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் 2013-ல் வெளியான 'திரிஷ்யம்' படம் ரூ.5 கோடியில் தயாராகி ரூ.75 கோடி வசூலித்தது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. 2021-ல் வெளியான 'திரிஷ்யம் 2' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது 'திரிஷ்யம் 3' திரைப்படம் வருகிற 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த புதிய போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.