ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் உருவாகியுள்ள 'திரிஷ்யம் 3' திரைப்படம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த 2013-ல் தொடங்கி வசூல் சாதனை படைத்த இப்படத்தின் முந்தைய 2 பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, 3-வது பாகம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகியுள்ளது. இந்தி பதிப்பில் அஜய் தேவ்கன் மற்றும் தபு ஆகியோர் நடித்துள்ளனர்.