அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது 'ஹைபோநெட்ரீமியா' எனப்படும் உடலில் சோடியம் அளவு ஆபத்தான நிலைக்கு குறையும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் சிறுநீரகங்கள் அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் திணறி, உடலின் செல்கள் மற்றும் மூளையில் வீக்கம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம். எனவே, தாகத்திற்கு ஏற்பவும், உடலின் தேவைக்கு ஏற்பவும் அளவாக தண்ணீர் குடிப்பதே ஆரோக்கியமானது என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள்.